Posts

Showing posts from January, 2011

மனத்தூய்மை வினைத்தூய்மை

மனிதனிடம் விலங்கினத்தின் வினைப் பதிவுகள்தான் முதன்மையாக அமைந்துள்ளன. மனிதனுடைய உயர்வோ மிகவும் மதிப்புடையது.இயற்கை வளங்களை அறிவாற்றலாலும், கைத்திறனாலும் உருமாற்றி அழகுபடுத்தி அவற்றின் மூலம் அற நெறி நின்று வாழத் தக்க மேன்மை படைத்தவன் மனிதன். என்றாலும், அடிப்படையிலே பறித்துண்டு வாழும் பதிவுகள் அமைந்துள்ளன. பறித்துண்ணும் ஒரே குற்றம்தான் மனிதனிடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். பொருள், புகழ், அதிகாரம், புலனின்ப வேட்கையாக எழுச்சி பெற்று, பொய், களவு, கொலை,கற்பழிப்பு எனும் ஐந்து பெரும் பழிச்செயல்களாக மலர்ந்து விட்டன. மனப்பயிற்சியாலும், அற நெறியாகிய ஒழுக்கம்,கடமை,ஈகை என்ற மூவகை செயல் பயிற்சியாலும் தான் மனிதன் மனத்தூய்மையும்,வினைத் தூய்மையும் பெற முடியும். பெற வேண்டும்.இல்லையெனில் மனித குல வாழ்வில் சிக்கலும்,துன்பமும் நீங்காது.அமைதியே கிட்டாது. இப்போது முடிவெடுங்கள். சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லாருக்குமே யோகம் என்றும்,தவம் என்றும்,பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ள,உள்ளத்தையும் செயலையும் ஒழுங்குபடுத்துகின்ற உயர்ந்த பயிற்சி அவசியம் தான் என்ற முடிவு கிடைக்கும். இத்தகைய யோகப் பயிற்சியை காலத்திற்கேற்பச...